2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கல்லடி பிரதேசத்தில் வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கல்லடி பிரதேசத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 4 வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

இவ்வீதி புனரமைப்பு பணிகளுக்காக சுமார் 98 இலட்சம் ரூபா தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர் வசந்தராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .