2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்; பெண்கள் இருவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐயங்கேனி கிராமத்தில் அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தேடி பெண் ஆதரவாளர்கள் வீடு வீடாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மற்றுமொரு அரசியல் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இப்பெண்களை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையிலுள்ள பெண்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் நசீர் ஹாபீசின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • rima Thursday, 30 August 2012 04:50 PM

    இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும். இவர்களை சட்டமுன் நிறுத்த வேண்டும். யாராக இருந்தாலும் சரி.

    Reply : 0       0

    mim ashraff Thursday, 30 August 2012 05:29 PM

    பெண்களை தாக்குவது அநாகரிகமானது.

    Reply : 0       0

    Riyas Thursday, 30 August 2012 05:56 PM

    ஜனநாய நாட்டில் ஒவ்வொருத்தரும் தத்தம் கொள்கைகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதுதானே முறை. அதை விடுத்து அடிதடி ஏன். ஐயா பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள் அதுபோல தலைவா்கள் என்பவா்களிடம் ஒழுக்கம் பண்பு ஜனநாயகத்தை மதிக்கின்ற பக்குவம் இருந்தால் ஏன் பெண்களை அடிப்பார்கள் ? அவ்வாறுதான் குறிப்பி்ட்ட பெண்கள் சட்டவிரோதமான முறையில் பிரச்சாரம் செய்தால் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதுதானே!!!

    Reply : 0       0

    sabeer mohammed Thursday, 30 August 2012 10:16 PM

    பெண்களை அடிப்பாதால் மாற்றுக்கட்சிக்காரர்களின் வாக்குப்பலத்தை கூட்டமுடியும்மென்ற நிணைப்போ?

    Reply : 0       0

    shan Thursday, 30 August 2012 10:33 PM

    எதை சிலர் எதிர்பார்க்கிறார்களோ அதை நாமே அமைத்துக் கொடுக்கிறோம். ஒரே இனத்தவர்களுக்கிடையில் அடி தடி யோசிக்க மாட்டீங்களா????

    Reply : 0       0

    hayley Friday, 31 August 2012 05:29 AM

    பென்களிடம் உருவாகியுள்ள சமூக பொறுப்பை பார்க்கும்போதே மட்ட‌கலப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி வாகை சூடப்போகின்றது புலனாகின்றது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .