2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

புதிய நிர்மாணப் பணிக்காக கல்லடி பாலத்தை மூடுவதாக அறிவிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து இணைப்புப் பாலமாக அமையும் கல்லடிப் பாலம் புதிய நிர்மாணப் பணிகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.30 மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கல்லடிப்பலாத்தினூடாக எதுவித போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனால், கல்முனை - மட்டக்களப்பு வீதியில் பயணிப்பவர்கள் வேறு வீதிகளினூடாக பயணித்தல் வேண்டும்.

70 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தப்பாலம் ஜனாதிபதியின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அதிநவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இப்பாலத்தை பயன்படுத்தும் கொழும்பு திருகோணமலை, கதுறுவெல, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, பதுளை, பாணந்துறை, மூதூர் ஆகிய முக்கிய இடங்களில் இருந்து காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அம்பாறை, பொத்துவில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்காக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .