2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்திற்கான பாத யாத்திரை ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்திற்கான பாத யாத்திரை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து இன்று காலை மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ் சமூகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.

இவ் ஆலயத் திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவ நாட்கள் திருப்பலி இடம்பெற்ற நிலையில் நாளை ஞாயிற்றுக் கிழமை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆஜர் வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

இவ் ஆலய திருவிழா நிறைவு தினத்திற்கு முதல் நாள் காலா காலமாக கிறிஸ்தவ வாழ் சமூகத்தால் பாத யாத்திரை ஆமற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற பாத யாத்திரையில் பெருந்திரளான விசுவாசிகள் கலந்து கொண்டனர்.இவ் யாத்திரை வலையிறவுப் பாலம் ஊடாக வவுணதீவுப் பிரதேச செயலகத்தை சென்றடைந்ததும் பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் அலுவலகர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குளிர் பாணம் வழங்கப்பட்டதுடன் மதிய உணவுப் பார்சல்களும் வழங்கப்பட்டன.

வவுணதீவுப் பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும்; உபசரிப்பைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.ஐ.றசிவன் அவர்களது பிரசங்கம் இடம்பெற்றது. பிரசங்கத்தினைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால் அன்னைக்கு மாலை அணிவிக்கப்பட பாதயாத்திரை மீண்டும் ஆரம்பமானது.

பாத யாத்திரை பிற்பகல் 2.00 மணியளவில் ஆலயத்தைச் சென்றடைந்ததும் அன்னையின் திருச் சுரப ஆசீர் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ் சமூக இணைப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்களால் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .