2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தாண்டவன்வெளி கண்ணகை அம்மன் ஆலய தலவிருட்சம் முறிந்து விழுந்தது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

200 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு, தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகை அம்மன் ஆலயத்தின் தலவிருட்சமான மதுரை மரம் இன்று பிற்பகல் வீசிய கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்துள்ளது.

இம்மரம் முறிந்து விழுந்ததினால் ஆலயத்தின் முன்பகுதி உடைந்துள்ளது. அத்துடன், மடைப்பள்ளி எனப்படும் ஆலய வேலைகள் நடைபெறும் கட்டடமும் சேதமடைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் அண்மையில் வைகாசிக் குளிர்த்தி நடைபெற்று வருடாந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .