2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சூறாசபை உறுப்பினர் பளுல்ஹக்கிமின் வான் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.பளுல்ஹக்கிமினுடைய வானின் கண்ணாடிகள் நேற்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடி பதுறியா வீதியில் உள்ள கராஜ்ஜில் திருத்த வேலைகளுக்காக எம்.எம்.பளுல்ஹக்கிமினுடைய வான் விடப்பட்டிருந்ததாகவும்
இதன்போது வானின் கண்ணாடிகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கராஜ்ஜின் உரிமையாளர் பொலிஸில்  முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடிப்  பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .