2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹக்கீமுக்கு எதிராக பேசுமாறு ஜனாதிபதியிடம் முஸ்லிம் அமைச்சர்கள் கூறுவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்:

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ரவூப் ஹக்கீமுக்கு எதிராக தேர்தல் மேடைகளில் பேசுங்கள் என்று முஸ்லிம் அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் கூறுவதாகவும் இதனை  ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'என்னைத் தாக்கி எனக்கு எதிராக பேசுமாறு முஸ்லிம் அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் சென்று கூறுவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்.
ஹக்கீம் உங்களை தாக்கி பேசுமாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்னிடம் கூறுகின்றனர் என ஜனாதிபதி என்னிடம் இதனைத் தெரிவித்தார்.
இதுதான் இன்று முஸ்லிம் அமைச்சர்களின் நிலைமை என்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு நமது பெண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இந்தக் கட்சிக்கு பெண்கள் செய்யும் பங்களிப்புக்களை நாம் மறந்துவிட முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மறைந்த தலைவரின் மனைவி ஷேரியல் அஷ்ரப் இருந்தார். பின்னர் அவர் இந்தக் கட்சியை விட்டுப் போய்விட்டார். இன்று சல்மா அமீர் ஹம்சா இந்தக் கட்சியில் ஒரு பெண் வேட்பாளராக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று அரசியல் செய்ய சமூக சேவையில் ஈடுபட வேண்டும். இதற்கு நல்லதொரு உதாரணமாக சல்மா ஹம்சாவை நாம் பார்க்கலாம். இன்று அரபு நாடுகளிலும் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை நாம் காணக்ககூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக எமது கட்சியின் ஊடாக சல்மா ஹம்சா தெரிவுசெய்யப்பட்டு இந்த கட்சிக்கும் பெண்களுக்கும் சிறந்த பணியினை ஆற்றி வருகின்றார்

இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது முக்கியமான ஒரு தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தினையும் ஒற்றுமையினையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதற்கு எமது பெண்கள் பாரிய பங்களிப்புச்செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரப் பணியில் பெண்கள் ஈடுபட்டு முஸ்லிம் காங்கிரஸை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.

இங்கு வந்துள்ள ஒவ்வொரு சகோதரியும் ஒருவருக்கு 30 வாக்குகளை திரட்ட வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .