2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மீராவோடை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் மீராவோடை ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் எழுந்தருளி ஐம்பொன் உருவச்சிலை உட்பட ஏனைய ஆலய உபகரணங்களும் நேற்று சனிக்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

38 கிலோகிராம் எடையுடைய ஐம்பொன் கண்ணகி அம்மன் எழுந்தருளி உருவச்சிலை, குத்துவிளக்குகள், பூஜைக்கான உபகரணங்கள் திருட்டுப்போயுள்ளதாக ஆலய குருக்கள் சிவஸ்ரீசெல்வநாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, ஆலய உற்சவம் நடைபெற்று ஒருவாரம் ஆன நிலையிலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .