2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

முஸ்லிம்களும் சிங்களவர்களும் மோதும்போதே அரசியல் செய்ய இலகுவாகுமென எண்ணி மு.கா. தலைமை செயற்படுகின்றது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


முஸ்லிம்களும் சிங்களவர்களும் மோதிக்கொள்ள வேண்டும்.அப்போததான் தனக்கு அரசியல் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்று எண்ணி முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயற்பட்டு வருகின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் எம்.அச்சிமுகம்மது தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'முதியோர் முதல் சிறுவர்கள்வரை நோன்பு நோற்று பிரார்த்தனை செய்து சமூகத்தின் பாதுகாப்பிற்காக மறைந்த தலைவரினால் வளர்த்து எடுக்கப்பட்ட கட்சி அவரின் மறைவின் பின்னர் இன்று முஸ்லிம் சமூகத்தை இன்னொரு சமூகத்துடன் பகைமைப்படுத்தி கட்சிக்கு வாக்குச் சேர்க்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சமூகத்தின் கல்வி, விவசாயம், நிலப் பிரச்சினை, குடிநீர்ப்; பிரச்சினை என்று எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் எதுவும் தெரியாமல் எமது கட்சியால்தான் எமது உரிமையைப் பாதுகாக்கமுடியும் என்று கூறுகின்றனர்.  மர்ஹூம் அஸ்ரப் தலைவரின் மறைவுக்குப் பிறகு இன்றைய தலைவரால் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள் எவை என்று பார்த்தால் அதற்கு விடை கேள்விக்குறியாகத்தான் இருக்கும்' என்றார். 
இந்தக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேசசபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.பி.உவைஸின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 65 பேர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .