2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பல்வேறு விபத்துக்களில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு வாவிக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி காயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் இருந்து பழுகாமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த முச்சக்கரவண்டிக்கு குறுக்காக  மாடு ஓடியதால் இந்த விபத்து சம்பவித்தது.

காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மண்டூர், பாலமுனையில் நேற்று மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் ஒன்றுடனொன்று மோதியதில்  நால்வர் காயமைடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவனும் அடங்குகின்றான்.

இதேவேளை, எருவில் பகுதியில் நேற்று மாடு குத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .