2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மோதலுக்குப் பின்னர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் மோதலுக்குப் பின்னர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பில் நடைபெற்றது.

மனித நேய அமைப்புகளின் ஒன்றியம் (சி.எச்.ஏ நிறுவனம்) மட்டக்களப்பு ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில்  பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி நளினி ரெட்ணராஜா வளவாளராக கலந்து கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 18 முஸ்லிம், தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இதன்போது, 'பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல காரணங்களினால் அதிகரித்துச் செல்கின்றன. அவர்கள் தற்பொழுது இடம்பெயர்ந்து வருமானமீட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மோதலின் பின்னர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னைய காலங்களைப் போல் கொழும்பு சீ.எச்.ஏ நிறுவனத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும்' என ஸ்தா சொலிடாரிட்டி நிறுவனத் தலைவர் வருண் கமல்தாஸ் தெரிவித்தார்.

வறுமை, இளம் வயது திருமணங்கள், குடும்ப உறவு முறைகள் சீர் குலைந்து பெண்கள் வருமான ஈட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை, சொந்தக் கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பெண்களில் ஏற்படும் கலாசார மாற்றங்கள், ஆண்கள் மது போதைகளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .