2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் நேற்று செவ்வாய்க்கிழமை கொக்குவில், சின்னஊறணி, நாவற்கேணி ஆகிய பிரதேசங்களில் தேர்தல் வாக்களிப்பு தொடர்பிலான விழிப்புணர்வு  பிரசாரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பிரசார நடவடிக்கையின் போது வாக்களிக்கும் விதம் தொடர்பில் பரீட்சாத்தமாக விளக்கப்பட்டது.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகள் உரிய விதத்தில் அளிக்கப்படாமையால் பெருமளவான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலம் அந் நிலைமையினை வெகுவாகக் குறைக்க முடியும் என ஜெயராஜ் கருத்துத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .