2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக அஸாத்சாலி குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வைத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு அரை மணி நேரத்தில் அந்த பாதுகாப்பு மீள வாபஸ் பெறப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளருமான அஸாத் நாலி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'நான் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நிற்பதால் அச்சுறுத்தல் உள்ளது. இந்நிலையில் எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்டேன்.

அதற்கமைய தேர்தல் ஆணையாளர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் எனக்கு மட்டக்களப்பில் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தார்.

அந்த வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடியில் வைத்து இரண்டு பொலிஸார் எனது பாதுகாப்புக்கு அனுப்பட்டிருந்தனர். அவர்கள் எனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டு அரை மணி நேரத்தில் மீள வருமாறு அழைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மீண்டும் நான் தேர்தல் ஆணையாளரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்' என்று அஸாத் சாலி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .