2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வாக்களிப்பு பெட்டிகள் விநியோகம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்களிப்பு பெட்டிகள் விநியோகம் இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,47,099 பேர் வாக்களித் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் 100,616 வாக்காளர்களும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 162,451 வாக்காளர்களும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 84,032 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2011ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்துடன், மொத்தமாக 414 வாக்களிப்பு நிலையங்களும், 38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன. இதில் நான்கு வாக்கெண்ணும் நிலையங்கள் தபால் மூல வாக்காளர்களுக்காக ஒருக்கப்பட்டுள்ளன என்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .