2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் வேட்பாளரின் முச்சக்கரவண்டி மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எம்.சுக்ரி)

காத்தான்குடியில் வாக்குச்சாவடியொன்றுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரின்  முச்சக்கரவண்டி மீது சிலர் இன்று சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலுள்ள முஹ்சின் மௌலானா வாக்குச்சாவடிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் வி.ரி.எம்.முபாறக் சென்றபோது, அந்த இடத்திற்கு வந்த சிலர் தான் பயணித்த முச்சக்கரவண்டியை தாக்கியதாகவும் இதனால் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் முபாறக்கின் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடு செய்துள்ளதாக வேட்பாளர் முபாறக் கூறினார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .