2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூட்டமைப்புக்கு மட்டு. மக்கள் தக்கபாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்,எம்.சுக்ரி)

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து  அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

'நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை  எந்தவிதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.  அப்படியிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்று நான் வெற்றி பெற்றுள்ளேன்.

என்னை வெற்றி பெறச் செய்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு  ஆதரவு நல்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாணத்திலே வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; சார்பில் எனது நன்றியைத்  தெரிவிக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. தொடர்ந்து இதேபோன்று பல இடர்பாடுகளை ஏற்படுத்தக் காத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் கிழக்கு மக்கள் மிக்க அவதானமாக இருக்குமாறும்'  கேட்டுக்கொண்டார்.

  Comments - 0

  • Fnmera Monday, 10 September 2012 07:09 AM

    ஐயா. இது உங்களுக்கே அடுக்குமா? நீங்கள் சந்தித்துள்ள தோல்வி மிகப்பெரிது. அதை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முடியாது.

    Reply : 0       0

    Rasheed.M.A.A Monday, 10 September 2012 07:31 AM

    நீர் நல்ல அரசியல்வாதி.? உங்கழால் முதல் அமைச்சராக முடியுமா? பரிதாபம் ஐயா பரிதாபம்

    Reply : 0       0

    suresh Friday, 14 September 2012 02:27 AM

    வாழ்த்துக்கள் ஏதாவது செய்வதானால் அது யாரால் முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .