2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பிரம்புத் தொழிலில் ஜீவனோபாயம் குறைவு என தொழிலாளர்கள் கவலை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, மாவடிவேம்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பிரம்புத் தொழிலை ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்து வரும் மக்கள் பிரம்புத் தொழில் கிடைக்கும் வருவாய் பற்றாக்குறையாக காணப்படுவதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக  கவலை தெரிவிக்கின்றனர்.   

ஏனைய சிறுகைத்தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தாம் பல வருடங்களாக குடிசை வீடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் தமது வாழ்வதார தொழிலாக பிரம்புத் தொழிலை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பிரம்பின் மூலம் கூடைகள் மற்றும் கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தபோதும் வருமானம் போதிய நிலையில் கிடைக்கப்பெறுவதில்லையென அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது தெழிலுக்கு ஊக்குவிப்புக்கள் மற்றும் சந்தைவாய்ப்பு, கடன் வசதிகள், என்பன இருக்குமாக இருந்தால் இத்தொழில்; முன்னேற்றமடையலாமென அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .