2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காத்தான்குடி கடற் கரையோரத்தில் சடலம் மீட்பு

Super User   / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கடற் கரையோரத்தில் இன்று திங்கட்கிழமை மாலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலத்தை கடற் கரையோரத்தில் நின்ற பொதுமக்கள் சிலர் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

இச்சடலம் சிதைவடைந்துள்ளதால் அடையாளம் முடியாதுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கியதில் ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றைய மீனவரின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை. குறித்த மீனவரின் சடலமாக இந்த சடலம் இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .