2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளையை சந்தித்து ஆசி பெற்றார் சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், இன்று திருமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளையைச் சந்தித்து இன்று காலை ஆசி பெற்றுள்ளார்.

தான் தேர்தலில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து ஆயரிடம் ஆசி பெற்றதுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இச்சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய பூ.பிரசாந்தனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .