2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாநகர அழகுபடுத்தல் செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாநகர அழகுபடுத்தல் செயற்திட்டம் தொடர்பிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, இத்திட்டம் தொடர்பிலான விளக்கங்களை இலங்கையின் புகழ் பெற்ற நகரத்திட்டமிடலாளர் பாலித ஜயரத்ன வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன், மாநகர ஆணையாளர் சிவநாதன், மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச் பிள்ளை மற்றும் திணைக்கள தலைவர்கள் பங்குபற்றினர்.

மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களும், விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .