2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மனைவிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கணவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 12 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மனைவியை மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கணவனை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லா நேற்று உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சேற்றுக்குடாவில் மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் கணவனை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர். 

மதுபோதையில் காணப்பட்ட இக்கணவர் சீதனம் வாங்கிவருமாறு கூறி தனது மனைவியுடன் நேற்றுமுன்தினம் இரவு சண்டையிட்டதுடன், அவரை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மனைவியினதும்; இரு பிள்ளைகளினதும் அழுகைச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் மனைவியைக் காப்பாற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மனைவி மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .