2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடியில் மலசலகூட வசதிற்றவர்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி நகரசபை பிரிவில் மலசலகூட வசதியின்றியுள்ள  குடும்பங்களுக்கு யு.என்.ஹெபிடட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடி நகரசபையானது மலசலகூடங்களை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்வர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 33 மலசலகூடங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர், பதுறியா நகர், பிர்தௌஸ் நகர் ஆகிய பகுதிகளிலேயே மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் யு.என்.ஹெபிடட் நிறுவனத்தின் தேசிய செயற்றிட்ட ஆலோசகர் கலாநிதி பஹ்மி இஸ்மாயில், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பிரதித் தலைவர் எம்.எம்.ஜெஸீம், நகரசபை உறுப்பினர் அலி சப்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .