2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'சமயங்கள் கூறும் சமாதானமும் மனிதநேயமும்' எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  (ஜவீந்திரா)
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் மட்டக்களப்பு கிளை 'சமயங்கள் கூறும் சமாதானமும் மனிதநேயமும்' எனும் தலைப்பிலான திறந்த கட்டுரைப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது.

இதில் பங்கு கொள்பவர்கள் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களில் ஏதாவது ஒரு சமயத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையை எழுதலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த மட்டத்தில் நடைபெறும் இப்போட்டியில் கட்டுரையானது 500 சொற்களுக்கு மேற்படாதிருக்க வேண்டும். இதேவேளை ஏற்கனவே பிரசுரமான கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கோள்களுக்கு ஆதாரம் (சுநகநசநnஉந) தரப்பட வேண்டும். ஒவ்வொரு சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நான்கு சிறந்த கட்டுரைகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூபா 10,000 வீதம் பணப்பரிசும் சான்றிதழும் ஞாபகச்சின்னமும் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்படும் ஏனைய சிறந்த கட்டுரைகள் வருடாந்த விழா மலரில் பிரசுரமாகும். கட்டுரைகள் நடுவர் குழுவொன்றினால் மதிப்பிடு செய்யப்படுவதுவே இறுதியானது.

எதிர்வரும் ஒக்டோபர்; 15 ஆம் திகதிக்கு முன்பாக இக்கட்டுகரைகள் அனுப்பிவைக்கப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, கட்டுரைகள் : சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவை - மட்டக்களப்பு, இல: 52, வெபர் வீதி, (ஆயர் இல்ல வளாகம்), மட்டக்களப்பு 30,000. என்ற தபால் முகவரியிலோ அல்லது மவாநனஉhயயெஅழழசவாலளூலயாழழ.உழஅ என்ற மின்னஞ்சல்; முகவரியிலோ அனுப்பிவைக்கலாம் என சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் மட்டகக்ளப்பு கிளை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .