2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அமெரிக்காவில் முகம்மது நபியை இழிவுபடுத்தும் வீடியோ வெளியிட்டமைக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


அமெரிக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி வீடியோ ஒளி நாடா வெளியிட்டதாக கூறப்படுவதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா ஜும் ஆ பள்ளிவாயலில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது.

காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டனப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, இதை தட்டிக் கேட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை எங்கே, அமெரிக்காவே முகம்து நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தனத்தை இஸ்லாத்தில் காட்டாதே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கண்டனப் பேரணியில் ஈடுபட்டிருந்தோர் தாங்கியிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .