2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டு. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் பற்றிய மீளாய்வுக் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)

பொது மக்கள், ஊடகங்கள் மற்றும் உத்தியோகத்தரிடையே 'மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் பற்றிய வெளிப்பாடு தன்மையின் இயலளவினை கட்டியெழுப்புதல்'  எனும் தலைப்பிலான செயற்திட்டத்தின் மீளாய்வு கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது.

இச்செயலமர்வுக் கலந்துரையாடல் மார்கா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அசோக குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையளார் சிவநாதன், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உலக வங்கியின் அனுசரணையில் நடைபெறும் இச்செயற்திட்டமானது,  இலங்கையில் மாநகர சபைகள், நகர சபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் வரவுசெலவுத்திட்ட வெளிப்படைத்தன்மைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்றைய இக்கலந்துரையாடலில் மாநக உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் மாமாங்கராஜா மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய சிவில் சமூகம், ஊடகவியலராளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இதுவரை காலமும் நடைபெற்றுவந்த வரவுசெலவுத்திட்ட வெளிப்படைத்தன்மை குறித்த கலந்துரையாடல்கள் செயலமர்வுகள் களப்பயணங்கள் தொடர்பான பின்னூட்டங்கள், அபிப்பிராயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .