2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டு., அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கற்பித்தல் தேசிய டிப்ளோமா பட்டதாரிகளுக்கு சான்றி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித், ஜிப்ரான்)


மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிகளின் கற்பித்தல் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கல்வியைமச்சின் செயலாளர் கோத்தாபே ஜயரட்ன, தேசிய கல்வி கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எம்.அபேரட்ண பண்டார, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா, அட்டாளைச்செனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஏ.எல்.ஏ.றசூல் உட்பட உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிகளில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை கற்பித்தல் தேசிய டிப்ளோமா பாடநெறியை மேற்கொண்ட 1106 கற்பித்தல் தேசிய டிப்ளோமா பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .