2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

த.தே.கூ. - காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வேறு தினத்துக்கு மாற

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சமகால அரசியல் விடயம் தொடர்பாக  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும்  இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு காத்தான்குடி தாஜ் பிலாஸா ஹோட்டலில்  நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெறவிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் 5.45 மணி நேரமாகியும் வருகை தராத காரணத்தால், சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் 5.55 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிகள் கலந்துரையாடல் நடைபெறும் இடத்துக்கு வருகைதந்திருந்த வேளை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருக்கவில்லை. அதனால் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக அங்கிருந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவித்த த.தே.கூ வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 'நாங்கள் குறித்த நேரத்துக்கு வாரததால் முதலில்  நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். நாங்கள் உரிய நேரத்துக்கு வருகை தரவிருந்தவேளையில், எங்களுடைய கட்சியில் இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனால் நாங்கள் அவர் சம்பந்தமாக கவனம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் எங்களுக்கு உரிய நேரத்தில் வரா முடியாமல் போனது' எனத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக த.தே.கூ வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கணேசமூர்த்தி கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) இந்திரகுமார் நித்தியானந்தம் (பிரசன்னா)' -கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் வருகைதந்தனர்.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .