2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பொண்டுகள்சேனை மீள்குடியேற்ற கிராம கணேசா வித்தியாலய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரசேத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற பகுதியான பொண்டுகள்சேனை கணேசா வித்தியாலத்தின் பாடசாலை கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பகல் நடைபெற்றது.

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் இதற்காக மார் 25 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.

இதன் ஆரம்பபணியானது புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஜனாப் எம்.ஆர்.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் பீறிஸ், உதவிப்பணிப்பாளர் சஜன டி சில்வா, பொதுமுகாமையாளர் ஜயமன்ன, கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சக்கரவர்த்தி, கிராண் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் உதயசிறிதர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கடந்த யுத்தத்தினால் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்ட இப்பிரதேச மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் அண்மைகாலமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .