2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தெற்காசிய நாடுகளின் பெண்களுக்கான மாநாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா பங்கேற்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் தெற்காசிய நாடுகளின் பெண்கள் தலைமை தாங்கும் மாநாட்டில் இலங்கை சார்பாக காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா கலந்து கொண்டுள்ளார்.

பங்களாதேஷின் சிட்டக் கொங் நகரிலுள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகத்தில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகிய இம் மாநாடு நாளை வியாழக்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளது.

பங்களாதேசிலுள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகமும் அமெரிக்க தூதுவராலயமும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 70 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் பெண் வைத்தியர்கள், பெண் அதிபர்கள், பெண் மருத்துவ நிபுணர்கள், பெண் வழக்கறிஞர்கள், உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள், பெண் மேயர்கள், பெண் அரசியல் பிரமுகர்கள் என பல்துறை சார்ந்த பெண்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம் மாநாட்டில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா அமீர் ஹம்சா சிறப்புரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .