2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வண்டுகளின் தாக்கத்தால் தென்னை உற்பத்தியில் பாதிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வண்டுகளின் தாக்கம் காரணமாக தென்னை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

செவ்வண்டு, கருவண்டு தாக்கம் காரணமாக தென்னை மரங்கள் முற்றாக அழிவடைந்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
களுவாஞ்சிகுடி, களுதாவளை, திக்கோடை, பழுகாமம், போரதீவு, மயிலம்பாவெளி, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தேத்தாத்தீவு போன்ற இடங்களில் தற்போது வண்டுகளின் தாக்கம் அதிகரித்து பல தென்னை மரங்கள் அழிவடைந்தும் வருகின்றன.

சுனாமி அனர்த்தத்தின் பின்பு தென்னை செய்கையில் பலர் ஆர்வம் காட்டிய போதும் வண்டுகளின் தாக்கம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதைவிட விளைச்சல் காலங்களில் குரும்பைகளில் ஏற்பட்டுள்ள மைற் ஒட்டுண்ணி தாக்கம் காரணமாக குரும்பைகள் கருகி கீழ் விழுவதால் விளைச்சல் பாதிப்படைந்து வருகின்றது.

எனவே சம்பத்தப்பட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனத்தை செலுத்து வண்டுகளின் தாக்கத்திலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .