2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வாகன விபத்தில் சிறுமி பலி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (ஜதுஷன், ஜவீந்திரா)

மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஜெ.சிந்துமதி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

மேற்படி மாணவி, விபத்தில் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

டிப்பர் வாகனமொன்று மேற்படி மாணவி மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .