2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட். தூய மிக்கேல் கல்லூரியின் சமூக விழிப்புணர்வு நடை பவனி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர், சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'சமூக விழிப்புணர்வு நடை பவனி' இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

பாடசாலையில் இருந்த ஆரம்பமான இவ் நடை பவனியில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் உற்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இந் நடைபவனி திருமலை வீதி ஊடாகச் கோப்-இன் சந்திவரைச் சென்று மீண்டும் பாடசாலையை அடைந்தது.

இவ் நடை பவனி புனித மிக்கேல் கல்லூரியின் பாரம்பரிய பெருமையை காட்டுவதாகவும், மாணவர்களது ஆற்றல்கள், திறன்கள், சாதனைகளை புலப்படுத்துவதாகவும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்க கோருவதாகவும் காணப்பட்டது.

கல்லூரியின் பண்பை சமூகத்தில் உயர்த்தி வைக்கவும் ஒற்றுமையே நம் பலம் என்பதை கல்லூரி மாணவர், பழைய மாணவர், ஆசிரியர், பெற்றோர் மத்தியில் உணர்த்தும் முகமாக ஏற்பாடு செய்த இந் நிகழ்வினுடாக சாதனை படைத்த மாணவர்களது வெற்றிக் கிண்ணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .