2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுவாமி விவேகானந்தரின் ஜனன தினத்தை முன்னிட்டு ஊர்வலம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா, ஜதுசன்)


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று காலை மாபெரும் ஊர்வலமும் சுவாமி நினைவுப் போருரைக் கூட்டமும் இடம்பெற்றது.

இதன்போது, படுவான்கரைப் பகுதியான திருப்பழுகாமத்திலிருந்து ஒரு பேரணியும் கோவில் போரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரிய போரதீவிலிருந்து ஒரு பேரணியும் பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலை வந்தடைந்தது.

பின்னர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் சுவாமி விவேகானந்தரின் திவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.

இந்து சேவா சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினூடாக மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள இந்து ஆலய தர்மகத்தாக்கள், பரிபாலன சபையினர், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பெரியார்கள் கல்விமான்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டு 

இந்நிகழ்வில் விஸ்வ பிரமஸ்ரீ வை.இ.காந்தன் குருக்கள், கலைச்சுடர் க.தணிகாசலம், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பளார் மு.பவளகாந்தன், அதிபர் யோகேஸ்வரன், ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .