2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக அதி வண. பொன்னையா ஜோஸப் பதவியேற்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             

(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட துணை ஆயராக இறைபணியாற்றிவந்த அதிவண கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக  இன்று பதவியேற்றார். இதுவரை மட்டக்களப்பு   இணைப்பேராலயமாகச் செயற்பட்டுவந்த புளியந்தீவு புனித மரியாள் இணைப்பேராலயம் மட்டக்களப்பு மறைமாவட்ட பேராலயமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மறை மாவட்டம் 2012.07.03 ஆம் திகதி கத்தோலிக்க 16 ஆம் ஆசிர்வாதப்பரினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, திருமலை மறைமாவட்ட குருமுதல்வராக இறைபணியாற்றிய நிலையில் பேரருட்திரு கலாநிதி ஜோசப் பொன்னையா அடிகளார் 2008.05.24 ஆம் திகதி ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டு மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே  இன்று மிகவும் கோலாகலமாக பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அதி வணக்கத்துக்குரிய அதிவண. கலாநிதி யோசப் ஸ்பிற்ரேரி  முன்னிலையில் அவர் ஆயராக பதவியேற்றார்.

இந்நிகழிவில், 12 மறை மாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவியர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள், இறைமக்களும் பங்குபற்றினர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .