2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தாழங்குடாவில் ரெலிகொம் பரிவர்த்தனை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடாக் கிராமத்தில் ரெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய பரிவர்த்தனை நிலையமொன்றை தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைத்தார்.

'தேசத்துக்கு மகுடம்' திட்டத்தின் கீழ,; மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிராந்திய ரெலிகொம்மின் பரிவர்த்தனை பிராந்திய நிலையமாக இது செயற்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 50 ரெலிகொம் பரிவர்த்தனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் கோபிநாத் தெரிவித்தார்.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ரெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதி பிராந்திய முகாமையாளர் பத்மசுதன், மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் கோபிநாத், ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜ், மண்முனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.சிவலிங்கம், ரெலிகொம் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .