2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் மட்டு. மாவட்டத்துக்கான திட்ட ஆரம்ப நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

தேத்திற்கு மகுடம் கண்காட்சியின் 2013ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று திங்கட்கிழமை தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் முதலாவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். அதனையடுத்து திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்திற்கான தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், திட்டப் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம், அமைச்சர் மாவட்ட செயலகம் அமைந்துள்ள டச்சுக் கோட்டையினையும் சுற்றிப் பார்வையிட்டதுடன், அரசாங்க அதிபரின் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசத்தின் மகுடம் திடடத்தின் கீழான மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .