2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பாடசாலையைவிட்டு இடைவிலகும் மாணவர்களுக்காக விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

பாடசாலை செல்லும் மாணவர்களின் இடைவிலகலைத் தவிர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் பிரதேசம் தோரும் விழிப்பூட்டல் ஊர்வலத்தினை நடத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் இன்று காலை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவிற்குற்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியால மாணவர்களினால் 'இடை விலகலைத் தவிர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டல் ஊர்வலம் இடம்பெற்றது.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.பி.கான், ஆயிஷா மகளிர் மகா வித்தியால அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான ஊர்வலம் வாழைச்சேனை ஆலிம் வீதி, பிரதான வீதி, ஜூம்ஆப் பள்ளிவாயல் வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தது.

ஊர்வலத்தின் போது பாடசாலை இடை விலகலைத் தவிர்ப்போம் எனும் கருப் பொருளிலான துண்டுப் பிரசுரம் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .