2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கிலங்கை சுற்றுலாக் கற்கைகள் பாடசாலை திறப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கிழக்கிலங்கை சுற்றுலாக் கற்கைகள் பாடசாலை மட்டக்களப்பு, இருதயபுரத்தில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சார்பில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுற்றுலாக் கற்கைகள் பாடசாலையின் பணிப்பாளர்களான விஜித நுகேகொட, திலக் விஜயரத்ன ஆகியோரும், கிழக்கிலங்கை சுற்றுலாக் கற்கைகள் பாடசாலையின் ஆலோசகரும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் துறைப் பணிப்பாளருமான பொன் செல்வநாயகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கிலங்கையில் சுற்றுலாக் கற்கைத்துறையினை விருத்தி செய்யும் நோக்கில் இக்கற்கை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .