2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

உலக குடியிருப்புதின வைபவம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


உலக குடியிருப்பு தின வைபவம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. 'இந்தமுறை உலக குடியிருப்பு தினம் மாற்றமுறும் குடியிருப்புக்களும் உருப்பெறும் வாய்ப்புக்களும்' என்னும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது. 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .