2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை: மட்டக்களப்பில் மிக்கேல் கல்லூரி மாணவன் துவாரகேஷ் முதலிடம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ் வண்ணன் துவாரகேஷ் 192 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

இம்மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தோல் வைத்திய நிபுணர் தமிழ்வண்ணன் மற்றும் டாக்டர் பகீரதி தமிழ்வண்ணன் ஆகியோரின் புதல்வராவார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அப்துல் முனாஸ் முகம்மது மதீன் 190 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தினையும், காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் எம்.எல்.ஏ.எப்.நிபாசத், மற்றும் எம்.எஸ்.ஏ.ஸப்னி ஆகிய இரண்டு மாணவர்கள் தலா 188 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0

  • api Tuesday, 25 September 2012 06:13 PM

    வாழ்த்துக்கள் துவாரகேக்ஷ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .