2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக காத்தான்குடி நகர சபையில் கண்டன தீர்மானம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                              (எம்.சுக்ரி)
உலகின் அனைத்து இஸ்லாமியர்களினாலும் தமது உயிரிலும் மேலாக நேசிக்கப்படுகின்ற கண்மனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், உலகிற்கே சாந்தி சமாதானத்தைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தையும் கேவலப்படுத்தி அமெரிக்காவைச் சேர்ந்த சாம் பாசைல் என்பவரால் தயாரிக்கப்பட்டு அலான் ரொபட் என்பவரால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'அப்பாவி முஸ்லிம்கள்' எனும் திரைப்படத்திற்கு எதிராக  காத்தான்குடி நகரசபை வண்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக காத்தான்குடி நகர சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற போது இக் கண்டன தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஒப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள இக் கண்டன தீர்மானித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இத்திரைப்படத்தை தடை செய்யக் கோரிய போது தடை செய்ய முடியாதென கருத்துக் கூறிய அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனையும், அமெரிக்க அரசையும் காத்தான்குடி நகரசபை கண்டிக்கின்றது. 

வரலாற்றுக் காலம் தொட்டு கயவர்களால் இஸ்லாத்திற்கு எதிராக இவ்வாறான சதி வலைகளும், கட்டுக் கதைகளும் புனையப்படுகின்ற போதும் இஸ்லாம் எழுச்சி பெற்றே வருகின்றது.  இதனைப் பொறுக்க முடியாத அமெரிக்க போன்ற மேற்கு நாடுகள் இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை கவனிக்கத்தக்கது. 

இன்று அமெரிக்காவினதும், மேற்குலகினதும் பொருளாதாரங்களும், நிதி முறைமைகளும் தோல்வியடைந்து இஸ்லாமிய பொருளாதார முறைமையும், இஸ்லாமிய நிதி முறைமையுமே சரியென உலகம் ஏற்க ஆரம்பித்துள்ள இச்சூழலில் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட இத்தகைய கயவர்களின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

எனவே, கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை உசுப்பிய இச்செயற்பாட்டை அமெரிக்காவும் அதற்கு துணை நிற்கும் நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென இச்சபை கோருகின்றது.  

அத்தோடு இத்திரைப்படத்தை இலங்கையில் வெளியீடு செய்ய சிலர் முயற்சித்த போதும் அதனைத் தடுத்து நிறுத்திய பௌத்த விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவுக்கும் இச்சபை சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.'

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .