2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டு. மேற்கு வலயக் கல்விப் பணிமனை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 5ஆவது கல்வி வலயமாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிமனையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் குறிஞ்சாமுனையில் இன்று வெள்ளிக்கிழமை  நாட்டப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கல்விப் பணிமனை,  மண்முனை மேற்குப் பிரதேசசபைக்குச் சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகின்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இவ்வலுவலகத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை மேற்குப் பிரதேசசபை தவிசாளர் கா.சுப்பிரமணியம், கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .