2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

குடிநீர் சுத்திகரிப்பு போத்தல்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம், மற்றும் கீச்சான்பள்ளம் கிராமங்களில் சுனாமி அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடுமபங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு போத்தல்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, ஒல்லிக்குளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுட்ன பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் இக் குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு தலைமை அதிகாரி அசதுர் றஹ்மான், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 100 குடும்பங்களுக்கு போத்தல்கள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் நீர் மற்றும் சுகாதார வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .