2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்குவதற்கென மட்டக்களப்பு சிறைச்சாலையின் உத்தியோகத்தர்களின் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எம்.கஜநாயக்க, உதவி ஜெயிலர் இ.மோகன்ராஜா, சிரேஷ்ட நலன்புரி உத்தியோகத்தர் ஸ்ரீனிவாசன் மற்றும் நலன்புரி உத்தியோகத்தர்களான எம்.முபாறக், ஏ.சபீனா, விமலச்சந்திரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் ஜனாபா முஸம்மில் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறைச்சாலை  உத்தியோகத்தர்களின்  உறவினர்களும்  இரத்ததானம் செய்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .