2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அமைதி ஊர்வலமும் ஒன்றுகூடலும்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்க்கும் அமைதி ஊர்வலமொன்றும் சிறுவர் ஒன்றுகூடலும் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

'எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று' என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சர்வோதயம் மற்றும் மட்டக்களப்பு விழுது நிறுவனமும் இணைந்து இவ் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான  ஊர்வலம், மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்ததை சென்றடைந்து அங்கு சிறுவர்களின் ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இவ் ஊர்வலத்திலும் ஒன்றுகூடலிலும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சர்வோதய இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .