2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரஹ்மான் ராஜினாமா

Super User   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி, எம்.சுக்ரி)

காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இராஜினாமா செய்துள்ளார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றியது. இதனால் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்  நகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

அமைப்பின் மீளழைத்தல் கொள்கைக்கமைவாகவே பொறியியலாளர். அப்துர் ரஹ்மான், நகர சபை உறுப்பினர் பதவியை கடந்த வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மாதாந்த அங்கத்தவர் ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற போது, பொறியியலாளர் ரஹ்மான் தனது இராஜினாமா கடித்தத்தினை இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தெளஸ் (நளீமி) கையளித்தார்.

இதனையடுத்து, காத்தான்குடி நகர சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்திற்கு எம்.எச்.ஏ. நஸீர் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபையினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0

  • ameen Sunday, 30 September 2012 08:43 AM

    நல்ல நடைமுறை இது... முழு இலங்கைக்குமே முன்மாதிரியான திட்டம். இந்த நடைமுறையை எல்லா கட்சிகளும் பின்பற்றினால் விருப்புவாக்கு சண்டை இருக்கவே இருக்காது...

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 30 September 2012 02:40 PM

    ஆமாம் இப்படி வாரதிற்கு ஒருவர பதவி ஏற்க வச்சா நகரசபையும் நாடும் நல்லா உருப்படும்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .