2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கட்டாக்காலி மிருகங்களினால் வாகன சாரதிகளும் பொதுமக்களும் சிரமம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தினம் தினம் அதிகரித்துவரும் கட்டாக்காலி மிருகங்களினால் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

களுவஞ்சிக்குடி, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய பிரதான நகரங்களின் பிரதான வீதிகளின் நடுவில் பெருமளவான மாடுகள் மற்றும் ஆடுகள் அலைந்து திரிவதனால் வாகன சாரதிகள்  வாகனங்களை செலுத்தமுடியாமல் சிரமத்தை எதிர்நோக்குவதுடன், இக்கட்டாக்காலிகளினால்  வீதி விபத்துக்களும் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நகரங்களின் உள்ளூராட்சிசபைகள் இக்கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .