2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பில்லை'

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலேயே திருகோணமலை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு செல்லவுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில்

"மாகாண சபை உறுப்பனர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய பொலிஸ் பாதுகாப்பு தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள்; கடந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமான பொலிஸ் பாதுகாப்பு இன்றியே நாளைய மாகாண சபை அமர்விற்கு செல்லவுள்ளோம்.

மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினர். இதனால், பாதுகாப்பின் நிமித்தம் வேறு இடங்களில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.

அப்படியிருந்தும் எமது பாதுகாப்பு குறித்து உரிய தரப்பினர் இதுவரை கவனம் செலுத்துவதாக இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதனாலேயே இந்த பாகுபாடு என நாம் கருதுகிறோம். இதனை எமது கட்சி தலைவர்கள் பொலிஸ் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தும் கூட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றி இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .