2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)


மட்டக்களப்பு மறை மாவட்ட புதிய ஆயராக பதவியேற்றுள்ள பொன்னைய்யா ஜோசப்பை வரவேற்றும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக கடமையாற்றிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளைக்கு பிரியாவிடையளிக்கும் வைபவமும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளருமான கலாநிதி எம்.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் எம்.மாமங்கராஜா உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமய சமூக பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு நீதிமன்றத்திலிருந்து  இருந்து மட்டக்களப்பு மறை மாவட்ட புதிய ஆயராக பதவியேற்றுள்ள பொன்னைய்யா ஜோசப் மற்றும்; மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயராக கடமையாற்றி தற்போது திருகோணமலை மாவட்டத்தின் மறை மாவட்ட ஆயராக கடமையாற்றும் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியத்துடன் சார்ள்ஸ் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு பாராட்டப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .