2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

உதயபுரம் பொதுமயானத்தில் சடலம் மீட்பு

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய கல்லாறு, உதயபுரம் பொதுமயானத்தில் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

பெரிய கல்லாறு 01ஆம் வட்டாரத்தை சேர்ந்த 42 வயதான சுப்ரமணியன் கருணதாஸன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாடுசென்றுள்ள நிலையில் தனது பிள்ளைகளுடன் இவர் வசித்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிகுடி; பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .